4000 பௌத்த பிக்­கு­களை திரட்டி அர­சியல் யாப்பு திருத்­தங்­களைத் தோற்­க­டிப்போம்.!

அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். அவ்­வாறு நடை­பெற்றால் நாடு 5 மாநி­லங்­க­ளாக பிரிந்­து­விடும் என பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் தெரி­வித்தார்.

tamilmission-com-173

அத்­துடன் 4000 பௌத்த குரு­மார்­களை கொழும்பில் ஒன்­று­கூட்டி அர­சியல் யாப்பில் திருத்­தங்­களைத் தோற்­க­டிப்போம். எம்மை மீறி திருத்­தங்கள் மேற்­கொண்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் தெரி­வித்தார்.

பொது­பல சேனாவின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நாட்டில் காலா­கா­ல­மாக இருந்­து­வரும் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற­வேண்டும் என்றால் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அத­னூ­டா­கவே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் என தெரி­வித்து இன்று அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. இந்த திருத்­தத்தில் மாகா­ண­ச­பை­க­ளுக்கு கூடு­த­லான அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தற்கும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அத்­துடன் அர­சியல் யாப்பில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்டு நாடு 5 மாநி­லங்­க­ளாகப் பிரிக்­கப்­பட்டால் இலங்­கையில் நல்­லி­ணக்கம் இல்­லாமல்   போகும். இன, மத அடிப்­ப­டையில் நாடு­பி­ரிந்து விடும். இத­னையே இந்­தியா மற்றும் மேற்­கத்­திய நாடுகள் எதிர்­பார்க்­கின்­றன. எனவே அனைத்து மக்­களும் வேறு­பா­டு­களை மறந்து அர­சியல் யாப்பு திருத்­தத்­திற்கு எதிர்ப்பு தெரி­விக்க வேண்டும். நாட்­டுப்­பற்­றுள்ள முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் எம்­முடன் இணைந்து போராட முன்­வ­ர­வேண்டும்.

மேலும் கடந்த 3 ஆம் திகதி நாம் மட்­டக்­க­ளப்­புக்கு மேற்­கொண்ட விஜயம் தடை செய்­யப்­பட்ட சம்­பவம் அர­சியல் யாப்பு திருத்­தத்­தினை எதிர்ப்­ப­தற்கு எமக்கு கிடைத்த சிறந்த சந்­தர்ப்­ப­மாகும். அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தில் மாகாண சபை­க­ளுக்கு கூடு­த­லான அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்­டு­மென முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. குறை­வான அதி­கா­ரங்கள் இருக்­கும்­போதே எமது விஜயம் தடுக்­கப்­ப­டு­கி­றது என்றால் கூடுதல் அதி­காரம் வழங்­கினால் என்­ன­வாகும்? ஆளு­நர்­களின் அதி­கா­ரங்­களை இல்­லாமற் செய்­வ­தற்கும் கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்­றுள்­ளன. ஆளு­நரின் அதி­கா­ரங்கள் இல்­லாமற் செய்­யப்­பட்டால் மாகாண முத­ல­மைச்­சர்கள் சர்­வா­தி­கா­ரி­க­ளா­வார்கள். தற்­போ­தைய அர­சியல் யாப்­பி­லுள்ள சில சிறிய விட­யங்­க­ளிலே மாற்­றங்கள் செய்­யப்­படப் போவ­தாக மக்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கி­றார்கள். அர­சியல் யாப்பு திருத்­தங்­களை சாதித்துக் கொள்­வ­தற்­காக பொது­ப­ல­சேனா முஸ்­லிம்கள் மீது மீண்டும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக பொய்ப்­பி­ர­சாரம் செய்­கி­றார்கள். நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளல்ல. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­தையே எதிர்க்­கிறோம்.

மேலும் நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்­காக குரல் கொடுப்­ப­தாக தெரி­வித்­து­வரும் ஜாதிக ஹெல உறு­மய அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பாக தங்கள் நிலைப்­பாட்டை பகி­ரங்­க­மாக மக்­க­ளுக்கு தெரி­விக்­க­வேண்டும். அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்ள இட­ம­ளிக்க கூடாது. அவ்­வாறு திருத்­தங்கள் ஏற்­பட்டால் நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­து­விடும் என நாட்டில் இருக்கும் சிரேஷ்ட சட்ட அறி­ஞர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசியலமைப்பில் ஜனாதிப தியின் நிறைவேற்று அதிகாரம் இல்லா மலாக்ககப்படக்கூடாது. நிறை வேற்று அதிகாரம் இருந்தால் மாத்திரமே ஆக் கிரமிப்புகளுக்கு எதிராக ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடியும். நிறை வேற்று அதிகாரத்தை இல்லாமலாக்குவதற்கல்ல, அதனை அசைப்பதற்கும் நாம் இடமளிக்க மாட்டோம். அதற்காக தேசப்பற்றுள்ள அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்  என்றார்.

Show More

Related Articles

Close