பருத்தித்துறை வர்த்தக நிலையத்தில் திருட்டு

poin-pedro

பருத்தித்துறை, தம்பசிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் ஜன்னல் கம்பியினை வளைத்து உள்ளே சென்ற திருடர்கள் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம், நேற்று திங்கட்கிழமை (21) அதிகாலை  இடம்பெற்றுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இத் திருட்டு சம்பவத்தில் 15 ஆயிரம் ரூபாய் பணம், 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.