சபரிமலை ஐயப்பன் கோயில் பெயர்மாற்றம்

sabarimala__large

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐயப்பன்கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோயில், சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோயில் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ பெயர் பலகைகளில் சபரிமலை தர்மசாஸ்தா கோயில் என அந்த கோயில் இதுவரை குறிப்பிடப்பட்டு வந்தது. இந்த முடிவு கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேவசம் போர்டு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதரும் ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Close