மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த இடமளிக்கப்படாது – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

625-500-560-350-160-300-053-800-900-160-90-2மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த இடமளிக்கப்படாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் எனவும் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது சட்டத்திற்கு விரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கும் அரசாங்கம் ஏன் புலிப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிப்பதில்லை என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Close