கிளிநொச்சி காடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு

கிளிநொச்சி யூனியன்குளம்  காட்டுப்பகுதியில்  இருந்து  உருக்குலைந்த நிலையில்  சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு இன்று விறகு வெட்டச் சென்றவர்களால்  கிளிநொச்சிப் பொலிஸாருக்கு  வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த காட்டுப்  பகுதிக்குச் சென்ற  கிளிநொச்சிப் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான  குழுவினர் முதலாம் கட்ட  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

kilinochi

குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார்  65 வயது மதிக்கத்தக்க  ஓர்  ஆண் எனவும்  அவர்  தன்வசம் வைத்திருந்த பொருட்களை பார்க்கும் போது  அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றனர் .

குறித்தசடலமானது யூனியன்குளம் மக்கள் குடியிருப்பில் இருந்து  பல கிலோமீற்றர் தொலைவில் காட்டுப்பகுதியில் உருக்கிலைந்த நிலையில் காணப்படுகின்றது.குறித்த பகுதியில்   மண்ணகழ்வு  மற்றும்  மரங்கடத்தல் போன்ற  சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதற்கான தடையங்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன்  கிளிநொச்சி குற்றத்தடயவியல் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சோதனைகளையும் விசாரணைகளையும் ஆரம்பிக்க இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

unnamed__6_ unnamed__7_ unnamed__9_ unnamed__13_ unnamed__14_

Show More

Related Articles

Close