தேங்காய் திருடச் சென்றவர் ; துப்பாக்கிச் சூட்டில் பலி

தேங்காய் தோட்டமொன்றில் தேங்காய் திருடச் சென்றவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் வெலிவேரி – இம்புல்கொட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 46 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் திருட்டுதனமாக தேங்காய் பறிக்க தோட்டத்தில் புகுந்த போது, அங்கிருந்த தோட்ட காவலரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட 63 வயதான தோட்ட காவலரை  பொலிஸார் கைது செய்துள்ளது.

Show More

Related Articles

Close