நீர்வேலியில் கழிவுகள் தரம்பிரித்தல் முகாமைத்துவ நிலையம்

நீர்வேலியில் 37 இலட்சம் ரூபாவில் அமைக்கப்படும் கழிவுகள் தரம்பிரித்தல் முகாமைத்துவ நிலையம். வலி. கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுகளை அகற்றி முகாமை செய்வதற்கு 37 இலட்சம் ரூபா செலவில் நீர்வேலி தரவைப் பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலம் கழிவகற்றலுக்கான கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றது.

14344175_1736412026386386_1748613815624730457_n

வலி.கிழக்கில் கழிவு அகற்றல் அப்புறப்படுத்தல் கடந்த காலங்களில் பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இப்பகுதியில் மக்களால் கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகள் உரிய முறையில் கழிவகற்றல் முகாமை மேற்கொள்ளப்படாமையால் இந்து மயானங்களோடு சேர்ந்த பகுதிகளில் பெருமளவில் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டன.

14344803_1736411399719782_4222224039205094036_n-1

 

இந்நிலையில் அமைக்கப்படும் முகாமைத்துவ கட்டமைப்பு மூலம் வலி.கிழக்குப் பகுதியில் ஆள்புலப் பரப்பில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு நீர்வேலி தரவைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதோடு கழிவுகள் சேதனைப் பசளையாக்கல் மீள்சுழற்சிக்கான பொருட்கள் அழிக்கப்பட வேண்டியவை என்ற வகையில் தரம்பிரிக்கப்பட்டு பொருத்தமான முறையில் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளன.

14355644_1736411936386395_1510122987406979113_n

Show More

Related Articles

Close