உடுவில் மகளீர் கல்லூரி தொடர்பில் கலந்துரையாடலுக்கு அழைப்பு

55216555

உடுவில் மகளீர் கல்லூரி பெற்றோர்கள் இடையிலான கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.  இது குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில் ,

உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்டு உள்ள குழப்ப நிலை தொடர்பில் கலந்துரையாடி தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் , மாணவிகளின் கல்வி செயற்பாடு அமைதியான முறையில் தொடர எதுவான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு , காங்கேசன்துறை வீதியில் சுன்னாக சந்திக்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக திஷா ஹெஸ்ட் ஹவுசில் நடைபெறவுள்ளது.

இதில் உடுவில் மகளீர் கல்லூரியில் தரம் ஒன்று முதல் ,உயர்தரம் வரையில் , கல்வி கற்கும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவிகளின் எதிர்கால கல்வி நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Show More

Related Articles

Close