பழைய சோறுதானே என்று ஒதுக்குபவர்களுக்கு : பழைய சோற்றின் நன்மைகள்

old soruழைய சோறுதானே என்று ஒதுக்குபவர்களுக்கு அதில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. அப்படி தெரிந்திருந்தால் அதை ஒதுக்கி பார்க்க மாட்டார்கள்.

மாறிவிட்ட சமூகத்தில் உணவு முறைகளும் முற்றிலும் வேறுவிதமாக மாறிவிட்டன. அத்தகைய உணவுகளை உண்ணும் போது பலவித பக்கவிளைவுகளும் வருகிறது.

ஆனால் நமது முன்னோர்கள் சாப்பிட்ட பழைய சோறு, அதற்கு தொட்டுக் கொள்ள வெங்காயம் இவை உடலில் பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

பழைய சோற்றில், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது நமது உணவு பாதையை ஆரோக்கியமாக்கும்.
பழைய சோற்றுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காலை உணவாக இதை உண்டால், உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
சோற்றில் இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறுநாள் இதை குடிப்பதால், உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும்.
பழைய சோற்றில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். மேலும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து, உடல் எடையும் குறையும். அதே போல் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து, உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது.
அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.
பழைய சோற்றுக்கு சூடான சாதத்தில் தண்ணீர் ஊற்றக் கூடாது. ஆறிய பின்பு மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் பலவித நன்மைகளை பெறலாம்.

Related Articles

Leave a Reply

Back to top button