புத்தர் சிலை உடைப்பு: உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

FotorCreated-518

வட மாகாணத்தில், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (05), அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டது.

உடைக்கப்பட்ட புத்தர் சிலைகளுக்குப் பதிலாக, பதிலாக, புதிய புத்தர் சிலைகளை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ய உத்தரவிடுமாறு, புத்தசாசன அமைச்சருக்கு உத்தரவிடுமாறும், மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், வடக்கிலுள்ள புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதால், அரசியலமைப்புத் திருத்தத்தில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருந்த முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு என்பன மீறப்பட்டுள்ள என்றும் இதன் மூலம், பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close