கலவரக்காரர்களைக் கலைக்கும் ஆயுதங்கள்

Tamil_Daily_News_70954531432

உலக அளவில் கலவரத்தைக் கட்டுப்படுத்த  என்னென்ன மாதிரியான கலவரத்தடுப்பு ஆயுதங்கள் இருக்கின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதோ…

கண்ணீர்ப் புகை குண்டு

கலவரக்காரர்களை அடக்க கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசுவது இந்தியாவுக்குப் புதிதல்ல. இதிலிருந்து வருகிற புகை, கண்களில் நீரை வரவழைக்கக் கூடியது. இருமல், மூச்சுத்திணறல், தற்காலிகப் பார்வையிழப்பு போன்றவற்றையும் ஏற்படுத்துவதால், கல்லேந்தி வரும் நபர்கள் கண்ணீரோடு ஓடிவிடுவார்கள்.

ரப்பர் குண்டுகள்

பெயர்தான் ரப்பர் குண்டே தவிர, உலோகத்தால் ஆன குண்டின் மீது ரப்பர் சூழ்ந்திருக்கும் என்பதே உண்மை. எனவே, வயிறு, கண், கன்னம் போன்ற மென்மையான உறுப்புகளில்பட்டால் காயம் ஏற்படும். வேறு இடங்களில் பட்டால் காயமிருக்காது என்றாலும், வலி பின்னியெடுத்துவிடும்.

அலைவீச்சு ஆயுதம்

கூட்டத்தினர் மீது மின்சார அலையைப் பாய்ச்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வைப்பது. அமெரிக்காவில் இதனைப் பயன்படுத்தியதால், 100 பேர் வரை இறந்துபோனார்கள். கடும் விமர்சனம் காரணமாகத் தற்போது இது பயன்பாட்டிலேயே இல்லாமல் போய்விட்டது.

பெல்லட்

பெல்லட் துப்பாக்கியில் கடுகளவே கொண்ட காரீயக் குண்டுகள் இருக்கும். ஒரு முறை ட்ரிகரை அழுத்தினால், ஒரு குண்டு 100 துகள்களாகப் பாய்ந்து வரும். உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், சதையைத் துளைத்துவிடும். இதனை தூரத்தில் இருந்துதான் பயன்படுத்த வேண்டும், கால்களை நோக்கித்தான் பிரயோகிக்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன.

Show More

Related Articles

Close