எங்களது வீடும் காணியும் இதுதான் என தனது மகனுக்குக் காட்டும் தாய்!

625.0.560.320.160.600.053.800.668.160.90-14

அண்மையில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் ஒரு தொகுதிக் காணி அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாத நிலையில் அப்பிரதேசத்து மக்கள் இராணுவத் தளபதியைச் சந்திக்க பரவிப்பாஞ்சானில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாமுக்குச் சென்றனர்.

அங்கு சென்ற மக்களுக்கு இராணுவத் தளபதி வெளியே சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இராணுவத் தளபதியைச் சந்திப்பதற்காக மக்கள் நீண்டநேரம் வெளியே காத்திருந்தபோது, அதில் நின்ற தாயொருவர் தனது மகனுக்கு இதுதான் எமது காணியும் வீடும் எனக் காட்டும் காட்சி.

Show More

Related Articles

Close