உலக மசாலா: ரத்தக்காட்டேரியாக வாழும் இளைஞர்!

masala_2969358f

இங்கிலாந்தில் வசிக்கும் டார்க்னெஸ் விலாட் டெபேஸ் (25), கடந்த 13 ஆண்டுகளாக தான் ரத்தக்காட்டேரியாக வாழ்ந்து வருவதாகச் சொல்கிறார்! “நான் சூரிய வெளிச்சத்துக்கோ, பூண்டின் வாசனைக்கோ பயந்து ஓடும் ரத்தக்காட்டேரி இல்லை. சிறுவனாக இருந்தபோது நாயுடன் வெளியே சென்றேன். அங்கே இறந்த ஆன்மாக்கள் மனிதர்கள் உடலில் வசிக்கக்கூடிய ஸோம்பி பெண்களைப் பார்த்தேன். பயத்தில் ஓடி வந்துவிட்டேன்.

ஆனால் ஆர்வம் அதிகமானது. ரத்தக்காட்டேரி படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நானே ரத்தக்காட்டேரியாக மாறியதை உணர்ந்தேன். என் பெயருடன் டார்க்னெஸ் என்பதை சேர்த்துக்கொண்டேன். தினமும் மாடு, பன்றியின் ரத்தத்தைக் குடித்து வருகிறேன். மனிதர்களின் ரத்தம் கிடைத்தால் அதையும் விடுவதில்லை. இறந்துபோன ஆன்மா ஒன்று என் உடலில் தங்கியிருக்கிறது. அதற்காகவே நான் ரத்தக்காட்டேரியாக மாறியிருக்கிறேன்.

அதனால்தான் ரத்தத்தைக் குடித்து, சவப்பெட்டியில் உறங்குகிறேன். பார்ப்பவர்களுக்கு நான் சாதாரண மனிதன் இல்லை, ரத்தக்காட்டேரி என்று புரிய வேண்டும். அதற்காக கண்களுக்கு மை பூசிக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகள் வரை இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவில்லை. இப்போது பலருக்கும் தெரிவதால் என்னைக் கண்டு அச்சப்படுகிறார்கள். நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. செய்யப் போவதும் இல்லை. என்னைக் கண்டு பயப்படாமல், கிண்டல் செய்யாமல் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை” என்கிறார் டார்க்னெஸ்.

Show More

Related Articles

Close