இறந்து போனவருக்காகக் காத்திருக்கும் நாய்!

masala_2967480f

பிரேசிலில் உள்ள ரூத் கார்டோசோ மருத்துவமனையை சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது நேகோ என்ற அழகிய கறுப்பு நாய். 8 மாதங்களுக்கு முன்பு ஏழை ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவருடன் நேகோவும் வந்தது. தன்னை வளர்த்தவர் திரும்பி வருவார் என்று மருத்துவமனை வாயிலில் காத்துக்கொண்டிருந்தது.

ஆனால் அவர் இறந்துவிட்ட விஷயம் நேகோவுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஆம்புலன்ஸ் வரும்போதும் ஆர்வத்துடன் ஓடும். அவரா என்று பார்க்கும். பிறகு ஏமாற்றத்துடன் திரும்பிவிடும். மருத்துவமனையில் கிடைக்கும் உணவுகளை உண்டு, அங்கேயே 8 மாதங்களாக தங்கியிருக்கிறது. நேகோவின் அன்பைக் கண்டு மருத்துவமனைக்கு வரும் செல்வந்தர்கள் சிலர் தத்து எடுத்துக்கொள்வதாகக் கூறி, அழைத்துச் சென்றனர்.

ஆனால் எவ்வளவு தொலைவுக்கு அழைத்துச் சென்றாலும் மறுநாளே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிடுகிறது நேகோ. பல முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம், நேகோவை பராமரிக்க முடிவு செய்தது. ஆனாலும் தன்னை வளர்த்தவரை தேடுவதை மட்டும் அது நிறுத்திக்கொள்ளவே இல்லை. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே பாய்ந்து சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது. நேகோவைப் பற்றி நிறைய பேர் இணையத்தில் எழுதி வருகிறார்கள். விதவிதமாகப் படங்கள் எடுத்து வெளியிடுகிறார்கள். உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களின் மனத்தில் இடம் பிடித்துவிட்டது நேகோ.

Show More

Related Articles

Close