புலிகளை அழித்த சிங்கத்தை வேட்டையாடவே பாதுகாப்பு குறைப்பு! பின்னணியில் இந்தியாவும் மேற்கும்!!

Sri Lanka President Mahinda Rajapakse prays during a religious ceremony at the 76 million dollar oil tank farm at the southern deep sea port of Hambantota on June 22, 2014. Sri Lanka is hoping its new harbour in the southern tip of the island would emerge a key refuelling centre along the East-West sea route. AFP PHOTO/ Ishara S. KODIKARAமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்கும் பின்னணியில் இந்தியாவும் மேற்குலகமும் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிடுகிறார். ராஜபக்சவுக்கோ அவரது குடும்பத்திற்கே ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் திருகோணமலை கடற்படை முகாமிற்குள் நுழைந்தைப்போல இந்த நாட்டுக்கு பெரிய அவமானம் கிடையாது என்று குறிப்பிட்ட அவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவின் அச்சுறுத்தல்களையும் மேற்குலகத்தின் அச்சுறுத்தல்களையும் தாண்டி புலிகளை அழித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அழிக்கப்பட்ட புலிகளுக்கு சிங்கத்தை வேட்டையாடவே இப்போது மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் ஏனைய தலைவர்களைப் போல மகிந்த ராஜபக்சவை குறிப்பிட முடியாது என்றும் ஆசியாவில் மகிந்த முக்கிய தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் புலிகளுக்கு எதிராக போர் தொடுத்தபோது இந்தியா அச்சுறுத்தியது என்றும் இலங்கை வான்பரப்பில் உணவுகளை போட்டு இறைமையை மீறியது என்றும் கூறிய அவர் அனைத்து தலையீடுகளையும் தகர்த்து மகிந்தவே புலிகளை அழித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை ஆட்சியிலிருந்து தூக்க சர்வதேசம் சதி செய்தது எனக் குறிப்பிட்ட அவர் நாட்டுக்காக பல தியாகங்களை செய்த மகிந்த ராஜபக்சவை புலி ஆதரவாளர்கள் லண்டன் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்றும் மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு இழிவான செயல் என்றும் ஹெகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

நன்றி குளோபல் தமிழ்  செய்திகள்

Show More

Related Articles

Leave a Reply

Close