நிலாவரை கிணற்றில் குதிக்க முற்பட்ட தாயும் பிள்ளைகளும் மீட்பு

நிலாவரை கிணற்றில் குதிக்க முயற்சி செய்த இளம் தாய் ஒருவரும், இரண்டு பிள்ளைகளையும் இரகசிய பொலிஸார் மீட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. தனது இரண்டு பிள்ளைகளுடன் நிலாவரை கிணற்று பகுதிக்கு வந்த தாய் ஒருவர், பிள்ளைகளுடன் கிணற்றில் குதிப்பதற்கு முயற்சித்துள்ளார். அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இரகசிய பொலிஸார், குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

தனது கணவனால் தனக்கு தனது பிள்ளைகளுக்கும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதகாவும் தினந்தோறும் தனது கணவன் மதுபோதையிலேயே வீட்டுக்கு வருவதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர் மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கணவனால் துன்புறுத்தல்கள் ஏற்பட்டால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யுமாறு கூறி அவர்களை விடுவித்துள்ளனர்.

Show More

Related Articles

Close