முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டுங்கள்- முதலமைச்சர்

vikneswaran-CMபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரினதும் விபரங்களை உடனடியாக பட்டியலிட்டு தருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு அறி வித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடுகையில்,
சில நாட்களாக தமிழர் பகுதிகளில் நடைபெற்றுவரும் நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வுகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் தங்கள் மேல் வேண்டுமென்றே திட்டமிட்டு நஞ்சு ஊசிகளை ஏற்றியதான தகவல்களையும் அன்றாட உணவில் இரசாயனம் கலந்து பரிமாறியதான தகவலையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த தகவல் உண்மையென கண்டறியப்பட்டால் இலங்கை அரசின் முகத்திரை சர்வதேசத்தின் முன்னாலும் உலகளாவிய தமிழ் சமூகத்தின் முன்னாலும் கிழிக்கப்படும். இச்செயலமர்வுகளில் சாட்சியமளித்த எல்லோருடைய ஏகோபித்த கருத்தும் அரசின் மேல்நம்பிக்கையின்மையே வெளிப்படுத்துகின் றன.
எனவே முன்னாள் போராளிகளுக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த இன அழிப்பு திட்டத்தினை அம்பலப்படுத்துவதற்கு அனைத்து பகுதிகளிலும் பொதுவாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்டும் இறந்த அல்லது விடுவிக்கப்பட்ட பின்னர் நோய்வாய்ப்பட்டிருக்கும் அல்லது வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளை உடனடியாக தேடியறிந்து பட்டியலிட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Show More

Related Articles

Close