வட மாகாண சுகாதார அமைச்சருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

ட மாகாண சுகாதார அமைarrestச்சர், டொக்டர் பத்மநாதன் சத்தியலிங்கத்திற்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்து, கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா – யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியில் சாந்தசோலை சந்தியில் இன்று அதிகாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான சந்தேகநபர் வவுனியா புதுக்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறியும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கூறியும் பலரிடம் சந்தேகநபர் கப்பம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், தன்னிடம் ஆயுதங்கள் காணப்படுவதாகத் தெரிவித்து பலரை சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வட மாகாண சுகாதார அமைச்சருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் 20 ஆம் திகதி வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Close