வெளித் தரப்பினரே பாத யாத்திரையில் குழப்பங்கள் விளைவித்தனர் – மஹிந்த

rajapaksa

வெளித் தரப்பினரே பாத யாத்திரையில் குழப்பங்கள் விளைவித்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் இறுதி வரையில் சிறந்த முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

பாத யாத்திரை இவ்வளவு வெற்றியளிக்கும் என காவல்துறையினர் கூட எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாத யாத்திரையை ஏற்பாடு செய்திருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

நேர்மையான நோக்கத்துடன் இந்த பாத யாத்திரையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும், சில தரப்பினர் இதனை குழப்ப முயற்சித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Close