யாழில் காணாமல்போன உறவினரை மீட்டுத்தருவதாக கூறி பணமோசடி

black-man-arrested copy

யாழ்ப்பாணத்தில் காணமல்போன ஒருவரை மீட்டுத்தருவதாக கூறி அவரது உறவினர்களிடமிருந்து  2 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா பணத்தை கப்பமாக பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டும்  நபருக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.  அத்துடன்   குறித்த நபரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதுடன் கண்டியை சொந்த இடமாக கொண்டவரும் தற்போது யாழ்.சாவகச்சேரி பகுதியில் வசித்து வருகின்ற நபரே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Close