கீரிமலையில் வழிபாட்டுக்கு அனுமதி தாருங்கள்

73-keerimalai-spring-mens-bathing-poolபுனித ஆடி அமாவாசை விரதம் அன்று கீரிமலையின் புனித இடங்களில் வழிபாட்டுக்கு அனுமதி தருமாறு இந்து மதத்தினரால் ஜனாதிபதி மற்றும் இந்து கலாசார அமைச்சருக்கு நேற்றைய தினம் மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை அகில இலங்கை சைவ மகாசபை மற்றும் ஆலய தர்ம கர்த்தாக்கள் இணைந்து பொதுமக் கள் சார்பாக தொலைநகல் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கையில்,
இந்துக்களின் ஆண்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக அனுஸ்டிக்கும் விரதமே ஆடி அமாவாசையாகும்.
இதனை அனுஸ்டிப்போர் அன்றைய தினம் உணவை சுருக்கி கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில் உள்ள கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்திலும் அதற்கு அருகில் தற்போது விடுவிக்கப்படாமல் உள்ள பாதாள கங்கை எனப்படும் ஆதி நகுலநாதன் ஆலயம் அமைந்திருந்த திருத்தம் பேஸ்வரத்திலும், சடையம்மா மட புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திலும் ஈழத்து திருச்செந்தூர், உச்சிப்பிள்ளையார், கிருஸ்ணன்கோவில் ஆலயத்திலும் வழிபாடு மேற்கொள்வது தொன்று தொட்டு வரும் வழமையாகும்
கீரிமலைப்பகுதியில் தற்போது பல இடங்கள்  விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சில மீற்றர் தூரத்துக்கு உட்பட்ட ஆலயங்களில் சைவ மக்கள் தமது புனித கடமையை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை நிலைநாட்டும் கொள்கையுடை இந்த அரசு குறித்த விடயம் தொடர்பாக சாதகமான நிலைப்பட்டினை மேற்கொள்ளுமாறு  சைவ மதத்தவர் சார்பாக வேண்டுகிறோம் என குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show More

Related Articles

Close