யாழ் பல்கைலைக்கு இயல்பு நிலையில் மாணவர் வருகை

7793யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மாணவர் வருகை இயல்பு நிலையை அடைந்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில், யாழ் பல்கலைக்கழக த்தின் விஞ்ஞானபீடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும் சில நாட்களுக்கு பின்னர் கல்வி நடவடிக்கைகள் சில பீடங்களில் மீளவும் வழமைக்குத் திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.
Show More

Related Articles

Close