குமாரபுரம் தமிழர்கள் படுகொலை‍- 20 ஆண்டுகள் விசாரணைகளின் பின்னர் ராணுவத்தினர் யாரும் குற்றமற்றவர்கள் என இலங்கை நீதிமன்று விடுதலை

kumarapuram kill 20 வருடங்களுக்கு முன்பு 1996 பிப்ரவரி 11-ம் தேதி திருகோணமலை கிழக்கில் குமரபுரம் பகுதியில் இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 தமிழர்கள் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள்.

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27ம் திகதி தொடக்கம் இந்த வழக்கு விசாரனை நடைபெற்று வந்த நிலையில் நேற்று (புதன்) இறுதி விசாரணை நடை பெற்றது.
சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக எதிரிகளை நிரபராதிகள் என கருதி அனைத்து குற்றச் சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்வதாக மேல் நீதிமன்ற மஞ்சுல திலகரட்ன இந்த தீர்ப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரனையின் போது சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான குமாரபுரம் கிராம மக்கள் , சிவில் அதிகாரிகள் உட்பட 121 பேர் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

சம்பவ தினத்தில் தெகியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்கள் எதிரிகளாக மூதூர் போலிஸாரால் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்ப. எதிரிகளில் இருவர் மரணமடைந்த நிலையில் ஏனைய 6 பேருக்கும் எதிராகவே இந்த வழக்கு விசாரனை நடைபெற்றது. அவர்கள் அனைவரும் சாட்சிகளால் இனம் காட்ட‌ப்பட்டிருந்தனர்.

1996ம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை; யுத்த சூழ்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி எதிரிகள் இந்த வழக்கை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதனடிப்படையில் மேல் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன.

Show More

Related Articles

Close