யாழ்.பல்கலை மோதல் மாணவர்கள் 7 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

judgegavelgenericயாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் கடந்த இரு வராங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலுக்கு கார ணமாக இருந்தார்கள் என்று கூறப்படும் மாணவர்கள் 7 பேருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி யுள்ளது.
குறித்த மாணவர்கள் 7 பேரை யும் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த அழைப்பாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்வரன் பிறப்பித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 16-ம் திகதி விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் மூலம் மாணவர்களை தாமும் வரவேற்க வேண்டும் எனவும் முரண்பட்டனர்.
எனினும் தமிழ் மரபுப்படி மாணவர்கள் அழைத்து வரப்பட்ட வேளை, திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டுவந்து ஆடினார்கள். இதனால் கொதிப்படைந்த தமிழ் மாணவர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றியும், நிகழ்ச்சி ஒருங்கமைப்புக்கு மாறாக எவ்வாறு கண்டிய நடனம் கொண்டுவரப்பட்டது என சிங்கள மாணவர்களிடம் கேள்வியெழுப்பினர்.
இதன்போது வாக்குவாதம் முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்களாலும் தாக்குதலில் ஈடுபட, பல்கலைக்கழகமே கலவர பூமியாக காணப்பட்டது.  இதன் காரணமாக பொலிஸார் சம்பவிடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவங்களையடுத்து அடுத்த சில நாட்களில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் சிசிதரன் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு தேடப்பட்ட நிலையில், நீதிமன்றில் சரண்டைந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையிலேயே மேலும் 7 மாணவர்களுக்கு யாழ்.நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button