இம்பல்ஸ் 2 என்ற சோலார் விமானம் உலகை சுற்றி மீண்டும் அபுதாபியை வந்தடைந்து சாதனை

சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி, உலகை சுற்றி வரும் சோதனை முயற்சியை சோலார் இம்பல்ஸ் 2 விமானம் நிறைவு செய்துள்ளது. உலகை முதல் முறையாக வெற்றிகரமாக சுற்றி வந்து இது சாதனை படைத்திருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிலிருந்து பயணத்தை தொடங்கிய இந்த விமானம், உலகை சுற்றி வருவதற்கு 16 மாதங்கள் எடுத்துகொண்டு, உள்ளூர் நேரப்படி அதிகாலை நான்கு மணி தாண்டிய சற்று நேரத்தில் அபுதாபியை வந்தடைந்தது.

34

விமானி பெர்டிரான்ட் பிக்காடு இந்த பயணத்தின் 17-வது மற்றும் கடைசி நிலையான கெய்ரோவை விட்டு சனிக்கிழமை புறப்பட்டார்.

Show More

Related Articles

Close