கொக்காவில் பகுதியில் விபத்து கணவனும் மனைவியும் பலி குழந்தை படுகாயம்

கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற  விபத்தில்   கணவனும் மனைவியும்  பலியாகியுள்ளனா்.
கொக்காவில் ஏ9 பாதையில் இன்று  ஞாயிறு  மாலை 4.30 மணியளவில்  சிறய பஸ் மற்றும் மோட்டாா் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் பலியாகியுள்ள நிலையில் அவா்களது குழந்தை கடும் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
விபத்து தொடா்பில் மேலும் தெரியவருவதாவது
யாழிலிருந்து   வவுனியாநோக்கி   சென்றுகொண்டிருந்த  மோட்டார்சைக்கிலும்   கொழும்பிலிருந்து  யாழ்நோக்கிச்   சென்றுகொண்டிருந்த சிறியரக  பேருந்து (மினி பஸ் )  ஒன்றும்  நேருக்கு   நேர்  மோதுண்டதிலையே இவ்விருவரும்  பலியாகியுள்ளனர்   அத்துடன்    ஒன்றரை  வயது  மதிக்கத்தக்க  குழந்தை பலத்த  காயங்களுடன்   கிளிநொச்சி பொது  வைத்தியசாலை  அனுமதிக்கப்பட்டுள்ளதுகுறித்த  விபத்து  சிறியரக  பேருந்தின்  (மினி பஸ் )  சாரதி   உறங்கிய  காரணத்தினால்   கட்டுப்பாட்டை  இழந்தே   எதிரே  வந்த  மோட்டார்  சைக்கிளில்  மோதியதாலே இவ்  விபத்து  இடம்பெற்றுள்ளதாக  மாங்குளம்  பொலிசார்  தெரிவிக்கின்றனர்

பேருந்தின்  சாரதி   விபத்து  நடந்த  இடத்தில்  இருந்து  தப்பிச்  சென்று  கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் சரணடைந்ததனை  அடுத்து   குறித்த  சாரதியை  கிளிநொச்சி  பொலிசார்   மாங்குளம்  பொலிசாரிடம்  கையளித்துள்ளனர்

விபத்தில்  இறந்தவர்கள்  வவுனியாவைச்  சேர்ந்த   24  வயதான அல்பட்   ஜெயக்குமார்  மற்றும்   யாழ்ப்பாணத்தை  சேர்ந்த  அவரது  மனைவியான 23   வயதான பிரஷாந்தினி   என்பவர்களே  குறித்த  விபத்தில்  உயிரிழந்துள்ளதாக   போலீசார்   தெரிவிப்பதோடு  மேலதிக  விசாரணைகளையும்  மேற்கொண்டு  வருகின்றனர்

Show More

Related Articles

Close