தேசிய அபிவிருத்திக்கான அமைப்பில் இராணுவத்தையும் இணைத்துகொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

“தேசிய அபிவிருத்திக்கான அமைப்பு”  எனும்  அமைப்பில் இராணுவம் மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளடக்கம்.

இலங்கை அமைச்சரவையானது தேசிய அபிவிருத்திக்கான அமைப்பில் இராணுவம் மற்றும் பொது மக்களை உள்ளடக்குவத‌ற்கு தனது ஒப்புதலை அளித்துள்ளது என அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக‌ தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக முப்படையினரதும் வளங்க‌ளும் அறிவும் பயன் படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான தமது பொறுப்புகளை ஏற்க இராணுவத்தினரும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்ட இந்த அலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரது ஒருங்கிணைப்பானது, முப்படைகளதும் வளங்கள், பயிற்சிகள், வலிமை என்பவற்றின் பங்களிப்புடன் தேசிய அபிவிருத்திக்கு பெரிதும் வலுச்சேர்க்குமெனவும், இந்த நடவடிக்கையானது அமைதியான முறையில் முன்னெடுக்கபடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சங்குநாதம் செய்திப்பிரிவு

Show More

Related Articles

Leave a Reply

Close