கிளிநொச்சியில்த னியார் பேருந்தை வழிமறித்து தாக்குதல்

ariyalai-bus-220416-seithy (1)மூன்று பேர் கொண்ட இனந் தெரியாத குழு தனியார் பேருந்தை வழி மறித்து தாக்கியதில் பஸ் சாரதியும் பயணி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு பஸ் கண்ணாடியும் சேதம் அடைந்துள்ளது.
இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி தர்ம புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பிர யாணமான தனியார் பேருந்தை பிற்பகல் 3 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில்வந்த  இனந் தெரியாத மூன்று பேர் பஸ்சினை கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து பஸ் பயணிக்க முற்படுகையில் ஒரு முச்சக்கர வண்டி பஸ்சினை இடைமறித்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொருக்கியதோடு பஸ்சின் சாரதியையும் தாக்கிவிட்டு அருகில் இருந்த ஒழுங்கை வழியாக தப்பி சென்றுள்ளனர்.
இதில் பஸ் சாரதி மற்றும் பயணி ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி தர்மபுரம் வைத் தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகள் வேறு ஒரு பேருந்து மூலமாக அவர்களது இடங்களிற்கு பயணமாவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
Show More

Related Articles

Leave a Reply

Close