ஜோதிகாவின் புதிய படம்

maxresdefaultரீஎண்ட்ரி கொடுத்தாலும், ’36வயதினிலே’ ஹிட் படத்தின் மூலம் களம் இறங்கினார் ஜோதிகா. அது கொடுத்த வரவேற்பு மீண்டும் கனமான ரோல் செய்யும் ஆர்வத்தை அவருக்குத் தூண்டிவிட்டுள்ளது. ஆம் இப்போது ‘ஜோ’  தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் படு பிஸி.  இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் வெளியான திரைப்படம் குற்றம் கடிதல். சிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது. இப்படம் பள்ளிக்கல்வி, ஆசிரியர்  மாணவர்களின் உறவு, என்று கல்வி உலகின் காணாத பக்கத்தை உருக்கமாக வெளிப்படுத்தி தமிழில் அனைவரையும் கவர்ந்தார் இயக்குனர் பிரம்மா.  அதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி கிடக்கிறது. பிரம்மாவின் அடுத்தப் படமும் சமுதாய சிந்தனையுடனே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இவரின் அடுத்தப் படம் பெண்களுக்கான பிரச்னைகளை பேசும் படமாக உருவாக்கி வருகிறார். இதில் பிரதான வேடத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார்.  இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இயல்பான படமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஜோதிகாவிற்கும், அவருடன் நடிக்கவிருக்கும் பிற கலைஞர்களுக்கும் சிறப்பு நடிப்புப் பயிற்சியை  தற்பொழுது பிரம்மா அளித்துவருகிறார். இப்பயிற்சி மட்டுமே 20 நாட்கள் நடைபெறவுள்ளது. அதன்பின்னரே படத்திற்கான படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கும் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இயக்குநர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Close