யாழ். – வெள்ளவத்தைக்கு புதிய பஸ் சேவை

SLTBஇலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை எதிர்வரும் 15 (15.7.2016) ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இச் சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும்.

இப் பஸ் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஊடாக சேவையில் ஈடுபடும்.

இச் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை யாழ். மத்திய பஸ் நிலையத்திலும் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலும் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சாலை முகாமையாளர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Close