இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லை – பிரதமர்

PMஇலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதியளிக்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் என வெளியான தகவல்கள் குறித்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதே மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது எனவும் இந்திய மீனவர்களின் நடவடிக்கையினால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அத்து மீறிய மீனவர்களின் படகுகளை மீளவும் இலங்கை அரசாங்கம் ஒப்படைக்காது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Close