யாழில் ‘ரொக்’ ரவுடி குழுவை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் வாள் மற்றும் கத்தியுடன் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘ரொக் டீம்’ உடன் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்படடுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வாள் ஒன்றும், நீண்டகத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்விப் பயிலும் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொக் டீம் உடன் தொடர்புடைய சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Rskudi

Show More

Leave a Reply

Close