கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

குறித்த விமானத்தில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் காயமடைந்த 112 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவர்களில் IX-1344 என்ற விமானத்தின் இரு விமானிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகளும் இரண்டு விமானிகள் மற்றும் நான்கு பணியாளர்களும் இருந்துள்ளனர்.

இதேவேளை, இந்த விபத்து தொடர்பாக தனது ருவிற்றர் பதிவில் கவலை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் இதுகுறித்து உரையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்

Show More

Related Articles

Close