யாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு!

நடைபெற்றுமுடிந்துள்ள நாடாளுமன்ற்த தேர்தலுக்கான வாக்களிப்பு எவ்வித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிறைவுபெற்ற பின்னர் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், “வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிவரை இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. எந்தவித அசம்பாவிதமுமின்றி தேர்தலானது மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.

எந்தவித வன்முறைச் சம்பவமும் பதிவாகவில்லை. அத்தோடு கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை அதிகளவான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. அதாவது 67.72% வாக்களிப்பு பதிவாகியுள்ளது” என்றார்.

Show More

Related Articles

Close