இறுதிப்போரில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியமையை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கசிந்துள்ளன‌.

இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போது இந்த கொத்து குண்டுகள் பயன் படுத்த பட்டிருக்கலாம் என “த கார்டியன்” செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பல பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்டுகிறது.

2008 இறுதி மற்றும் 2009 முற்பகுதிகளின் போது நடைபெற்ற இறுதி யுத்தத்தில் ப்யன் படுத்தப்பட்ட இந்த குண்டுகளின் எச்சங்கள் பின்னர் அங்கு வெடியகற்றும் பணியில் ஈடுபட்டவர்களால் கண்டுபிடிக்கபட்டது.
அவர்களால் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்களே கார்டியனுக்குகிடைத்துள்ளது.

தற்போதய அரசுக்கு, அரசில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோரால் வழி ந‌டத்தப்பட்ட இந்த யுத்தத்தில் சர்வதேச விதிமுறைகளை மீறி இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டமையானது, மனித உரிமை அமர்வுகள் நடைபெறும் இந்தக்காலப்பகுதியில் பெரும் நெருக்கடியினை கொடுத்துள்ளது.

சங்குநாதம் செய்திப்பிரிவு

 

1.RBK – 500 ஏ ஓ 2.5RT கொத்துக் குண்டு முல்லைத்தீவு, சாலை எனுமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது

War 01 copy

2.சுண்டிக்குளம் அருகில் காணப்படும் ஒரு வெடிக்காத ஏஓ 2.5RT கொத்து குண்டு

War 02 copy

3.சுண்டிக்குளத்தில் காணப்பட்ட இதே கிளஸ்டர் குண்டு ஜோர்ஜியா , சூடான் மற்றும் சிரியாவில் பயன்படுதத பட்டதாக‌ மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

war 03 copy

4.ஒரு ஏஓ 2.5ற்ட் குண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் குழி தோண்டும் போது காணப்பட்டது.

War 04 COPY

Show More

Related Articles

Leave a Reply

Close