ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20 தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னர் அறிவித்தபடி, போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செய்திருந்தது, அதற்கான அனுமதியை இந்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் கோரியது.

இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதற்கான அனுமதியை பெற்றது.

அடுத்த வாரம் ஐபிஎல் நிர்வாக சபைக் கூட்டத்தில் அட்டவணை மற்றும் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவது குறித்த கூடுதல் விபரங்கள் விவாதிக்கப்படும்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்ட ஐ.பி.எல். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் தொடரை நடத்தும் முயற்சியில் பல மாற்று வழிகளைப் தேடியது. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் தொற்றுநோய் காரணமாக அது சாத்தியமில்லை என பின்னர் புரிந்துக்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Close