தமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகளுக்கு மூடு விழா..

chennaiஅண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, “நான் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன்”, எனும் தேர்தல் உறுதிமொழிக்கமைய மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா 500 மதுபானக்கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 24-ஆம் தேதியன்று மதுபானக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணியிலுருந்து 12 மணியாக‌ குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், 500 கடைகளை மூடுவதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிக பட்சமாக மதுரை மண்டலத்தில் 201 கடைகள் மூடப்படுகின்றன. சென்னை மண்டலத்தில் 58 கடைகளும், கோவை மண்டலத்தில் 60 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 கடைகளும், சேலம் மண்டலத்தில் 48 கடைகளும் மூடப்படுகின்றன.
இந்தக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் விரைவில் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6000-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் தமிழக அரசினால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒட்டுமொத்தமாக 67 கோடி ரூபாயிலிருந்து 70 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனையாகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Close