கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 444 கைதிகளும் 64 பணிக்குழாமினரும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரைத் தொடந்து, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளடங்களாக இதுவரை 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த அவர்களின் உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, கந்தகாடு புனர்வாழ்வு மையம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பினை பேணியவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close