பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு!

எதிர்வரும் 13 முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி நிலைமை மோசமடைந்தால் பாடசாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரது சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு இன்று காலை அறிவித்திருந்தது.

இந்நிலையில் கல்வி அமைச்சினால் இன்று மாலை இந்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Close