கொரோனோ தொற்று 2,607 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வா’று தொற்று கண்டறியப்பட்ட இருவரும் ஈரானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில், 1981 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 615 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close