கிளிநொச்சியில் ஹெரோயினுடன் ஏழுபேர் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹேரோயின் போதைப் பொருளுடன் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, நேற்று மாலை 6.40 மணியளவில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து 31 வயதுடைய ஒருவர் 100 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கொழும்பு, வத்தளையில் இருந்து கிளிநொச்சியில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தனது உள்ளாடைக்குள் பொலித்தீன் பையினால் போதைப்பொருளை சுற்றி மறைத்துவைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று இரவு 10.45 மணியளவில் தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றிற்குள் இருந்து ஆறு இளைஞர்கள் 290 மில்லிகிராம் ஹெரேயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 19 தொடக்கம் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரினால் இவர்கள் செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைதுகள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Show More

Related Articles

Close