நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம்; ஐந்து தொழிலாளர்கள் உயிரிழப்பு

நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

இதன்போது பொய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

இவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இதேபோல் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பொய்லர் வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close