பிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு (François Fillon) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு 375,000 யூரோக்கள் அபராதம் மற்றும் தேர்தலில் போட்டியிட பத்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது மனைவி பெனிலோப் மற்றும் அவரது முன்னாள் உதவியாளர் மார்க் ஜூலாட் ஆகியோருக்கும் பரிஸ் தீர்ப்பாயம் கடுமையான தண்டனைகளை விதித்தது.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது, உடந்தையாக இருந்தமை மற்றும் மறைத்து வைத்தமை ஆகியவைக்காக அவர்கள் மீது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, பில்லனின் மனைவி பெனிலோப்புக்கு மூன்று ஆண்டுகள் தடுப்பு காவலும், 375,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தேசிய சட்டமன்றத்திற்கு ஒரு மில்லியன் யூரோக்களை திருப்பிச் செலுத்தும்படி பிலோன்ஸ் மற்றும் அவர்களது இணை பிரதிவாதிக்கு உத்தரவிடப்பட்டது.

இதனிடையே ‘இந்த முடிவு நியாயமானதல்ல, நாங்கள் மேல்முறையீடு செய்வோம்’ என்று ஃபிலோனின் வழக்கறிஞர் அன்டோனின் லெவி கூறியுள்ளார்.

2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கீழ் பில்லன் பிரதமராக இருந்தார்.

2017ஆம் ஆண்டில் பிரான்ஸ் செய்திதாளொன்று பிரான்சுவா பில்லன், பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக செய்தியொன்றை பிரசுரித்ததன் பின்னர், 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரம் தடம் புரண்டது மற்றும் இம்மானுவேல் மக்ரோனின் வெற்றிக்கும் வழிவகுத்தது.

Show More

Related Articles

Close