பதற்றத்திற்கு மத்தியில் பிரதமர் விசேட உரை

கொரோனாவின் உச்சம், லடாக் மோதல் மற்றும் சீன செயலிகளுக்கு தடை போன்ற பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளாரென பிரதமர் அலுவலகம் தனது ருவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 567,536 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. தற்போது நாட்டில் ஊரடங்கு கட்டங்கட்டமாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 2ஆம் கட்ட தளர்வுகள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றன.

அதேநேரம் இந்திய – சீன எல்லைப் பகுதியில், பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இவ்வாறான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதால், மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close