இலங்கையின் முக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து பற்றும் தீ‍ – வலுக்கும் சந்தேகங்கள்

House on fire at night

ன்றயதினம் கொழும்பு துறைமுகத்தில் இந்தியா செல்ல தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றிகொண்டது. எனினும் தீயணைப்புப்படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதிலும் தீக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதேபோல் சில தினங்களுக்கு முன்னர், கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் இருந்த ஆயுதக்களஞ்சியமும் தீப்பற்றி பாரிய அழிவுகளை ஏற்ற்படுத்தியிருந்தது. போரின் போது கொள்வனவு செய்யப்பட்டு அவை பின்னர் பயன்படுத்தப்படாமல், தற்போது சீன நிறுவனமொன்றுக்கு மீழ்விற்பனைக்கு தயாராக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் ஆயுதக்களஞ்சிய தீவிபத்துக்கான காரணங்களும் இன்னும் கண்டறியப்படவில்லை.

இப்படியாக அடுத்தடுத்து ஏற்படும் தீவிபத்துக்கள் தற்செயலானவையா அல்லது ஏதாவது உள்னோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படுகிறதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Close