தமிழகத்தை மிரட்டும் கொரோனா: உயிரிழப்புக்கள் 1000ஐ கடந்தன

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாநிலத்தில் நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 68 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் ஆயிரத்து 25 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், வைரஸ் தொற்றில் இருந்து நேற்று குணமடைந்து 2 ஆயிரத்து 737 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 44 ஆயிரத்து 99 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தில் நேற்று 34 ஆயிரத்து 805 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தம் 10 இலட்சத்து 77 ஆயிரத்து 454 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், மாநிலம் முழுவதும் ஒரேநாளில் 32 ஆயிரத்து 68 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதுவரை 10 இலட்சத்து 25 ஆயிரத்து 59 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Close